Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியிரிமை சட்டத்தை ரத்து செய்ய.. கூனாம்பட்டி மக்களே சிந்திப்பீர்! – சுயேட்சை வேட்பாளரின் சேட்டை போஸ்டர்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (11:11 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் சுயேட்சை வார்டு வேட்பாளர் ஒருவரின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கூனாம்பட்டி சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி வைரலாகி வருகிறது. கூனாம்பட்டி 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சின்னமுத்து என்பவர் “குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய, ஜிஎஸ்டி வரியை கட்டுப்படுத்த, ஊழலற்ற இந்தியாவை உருவாக்க” தனக்கு வாக்களிக்கும்படி போஸ்டர் ஒட்டியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் வார்டு உறுப்பினருக்கு இதையெல்லாம் செய்ய அதிகாரம் உள்ளதா? என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments