Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு கொலை, கொள்ளை; எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்த கூடாது! – தனபாலுக்கு இடைக்கால தடை!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (12:25 IST)
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.



கடந்த 2017ல் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட கார் டிரைவர் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். அதை தொடர்ந்து இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான சயனிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்புள்ளதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தனபால் தனது பெயரை கொடநாடு வழக்கில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்த விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பெயரை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனெ உத்தரவிட கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் 2 வாரத்தில் தனபால் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு..!

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments