கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் திடீர் மறியல்.. என்ன காரணம்?

Siva
சனி, 10 பிப்ரவரி 2024 (07:41 IST)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீரென பயணிகள் பேருந்துகளை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கடந்த சில நாட்களாக கிளாம்பாக்கத்தில் இருந்து கிளம்பி வருகின்றன என்பது தெரிந்தது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிக்கு போதிய பேருந்துகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென பேருந்துகளை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பல மணி நேரமாக திருச்சிக்கு பேருந்துகள் வரவில்லை என்றும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர். இதனை அடுத்து மறியல் செய்த பயணிகளிடம் கூடுதல் பேருந்துகள் இயக்குவதாக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து பயணிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியல் செய்த பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

தாயுடன் நண்பன் கள்ளத்தொடர்பு.. மகன் செய்த விபரீத செயலால் அதிர்ச்சி.!

சனாதனிகளுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்: மக்களுக்கு சித்தராமையா வேண்டுகோள்..!

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments