Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த நடராஜர் சிலைக்கு மேளதாள வரவேற்பு!

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (07:30 IST)
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள கோவில் ஒன்றில் இருந்து கடந்த 1982-ம் ஆண்டு கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா மியூசியத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதன்பின்னர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்  அவர்களின் தீவிர முயற்சிக்கு பின்னர்  மீட்கப்பட்டுள்ளது.


இந்த சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து சமீபத்தில் டெல்லி கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது அந்த சிலை சென்னைக்கு வந்துள்ளது. டெல்லியில் இருந்து ரயிலில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பஞ்சலோக நடராஜர் சிலைக்கு பொதுமக்களும், ஆன்மீகவாதிகளும் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட இந்த பஞ்சலோக  நடராஜர் சிலை இன்றைய மதிப்பில் ரூ.30 கோடி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை விரைவில் சென்னையில் இருந்து கல்லிடைக்குறிச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு ஐதீக முறைப்படி கல்லிடைக்குறிச்சி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் என்று தெரிகிறது


பஞ்சலோக நடராஜர் சிலையை மீட்க அதிரடி நடவடிக்கை எடுத்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த சிலையை மீட்க உதவிய ஆஸ்திரேலிய தமிழர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட விலைமதிப்பில்லா சிலை பொக்கிஷங்களை அவர் மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments