Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சலி கூட்டத்திற்கு கூப்பிடாத காங்கிரஸ்; கடுப்பான குஷ்பூ!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (14:19 IST)
மறைந்த எம்.பி வசந்தகுமாருக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த அஞ்சலி கூட்டத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ அழைக்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உயிரிழந்த நிலையில் அவருக்கான அஞ்சலி கூட்டம் இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வசந்தகுமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி கூட்டத்திற்கு காங்கிரஸ் தமிழக செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பூவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பூ “தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருக்கும் ஒரே செய்தி தொடர்பாளர் நான். ஆனால் வசந்தகுமார் எம்.பியின் நினைவஞ்சலி குறித்து எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. கட்சியை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனமாக ஆக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்வி கொள்கையை ஆதரித்து குஷ்பூ பதிவிட்டதும், அது காங்கிரஸினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments