Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைக்குழந்தையை தூக்கிக் கொஞ்சி....விளையாடி...வாக்குகள் சேகரித்த குஷ்பு

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (23:15 IST)
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட குஷ்பு கைக்குழந்தையை தூக்கி சிறிது நேரம் விளையாட்டு காட்டி பின்னர் வாக்கு சேகரித்தார். 
 
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். நாள்தோறும் தவறாமல் தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று குஷ்புவுக்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். 
 
இந்த நிலையில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட மாம்பலம் மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, சோலை மாமணி தெரு, பாலு முதலி தெரு,
 
 லாலா தோட்டம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி குஷ்பு கேட்டுக் கொண்டார். இதில்  மாம்பலம் பிரதான சாலை பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற குஷ்பு  அங்கு இருந்த காய்கறி, மீன் இறைச்சி விற்பனை கடை, டீ கடை என அனைத்து கடைகளுக்கும் சென்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொண்டார். 
 
முன்னதாக வாக்கு சேகரிக்க சென்ற குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments