Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் தப்புனா காவித்துண்டும் தப்புதான்! – குஷ்பூ பதில்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (12:00 IST)
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் அதுகுறித்து பாஜகவின் குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல விதிக்கப்பட்ட தடை மற்றும் அதை தொடர்ந்த போராட்டங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஹிஜாப் தடையை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை எதிர்த்து மாணவர்கள் மற்றும் சிலர் காவித்துண்டு அணிந்து போராட்டம் செய்வது போன்ற நிகழ்வுகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் இந்த சர்ச்சை பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ “நான் பள்ளி சென்ற காலத்தில் ஹிஜாப் போன்றவற்றை யாரும் அணிந்ததில்லை. சீருடைகள் மட்டுமே அணிந்தோம். சமத்துவத்தை வலியுறுத்ததான் ஒரே மாதிரியான சீருடைகள் வழங்கப்படுகின்றன. கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து செல்வது மட்டுமல்ல, காவித்துண்டு, நீலத்துண்டு போன்றவற்றை அணிந்து செல்வதும் தவறுதான்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments