கனமழையால் காவிரி டெல்டாவில் குறுவை நெல் நாசம்: வேட்டியை மடித்து கட்டி வயலில் இறங்கிய ஈபிஎஸ்..!

Mahendran
புதன், 22 அக்டோபர் 2025 (11:23 IST)
வடகிழக்கு பருவமழை பரவலாக தொடங்கியுள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 
தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையை ஒட்டிய பூதலூர் தாலுகா பகுதிகளில், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் வயல்களிலேயே சாய்ந்து, தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.
 
இதனால், நெல்மணிகள் ஈரத்தால் முளைவிட்டு காணப்படுகின்றன. பல ஆயிரக்கணக்கில் செலவு செய்த விவசாயிகள், பயிர்களை முழுமையாக அறுவடை செய்ய முடியாமல், பெரும் நஷ்டத்தை எண்ணி துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
விவசாயிகளின் இந்த துயரத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் ஆய்வு மேற்கொண்டார். காட்டூர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று, மழையில் முளைவிட்ட நெல்மணிகளைப் பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நேரில் குறைகளைக் கேட்டறிந்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லிவ் இன் உறவில் இருந்த காதல் ஜோடி மர்ம மரணம்.. 2 நாள் கழித்து சடலங்கள் மீட்பு..!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.2400 குறைவு..!

முதலாளி மீதுள்ள கோபத்தால் 5 வயது சிறுவனை கொலை செய்த டிரைவர்.. ஒரு கொடூர சம்பவம்..!

விமானத்தில் 11 பீர் குடித்துவிட்டு இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர்.. ரூ.4 கோடி சம்பாதிக்கும் ஐடி ஊழியரின் அநாகரீக செயல்..!

9 மாத குழந்தையுடன் பனி படர்ந்த சிகரத்தில் ஏறியதல் விபரீதம்: பெற்றோரின் பொறுப்பற்ற செயலுக்கு கண்டிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments