Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வின் நிரந்தர தலைவர் கலைஞர் தான் - ஸ்டாலினை வம்பிழுக்கும் அழகிரி

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (12:37 IST)
திமுகவின் தலைவர் செயல்தலைவர் ஸ்டாலின் தான் என நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக வின் நிரந்தர தலைவர் கலைஞர் தான் என அழகிரி கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய நேற்று ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் அளித்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். 
அவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், நாளை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் திமுகவின் தலைவராக அதிகாரப்பூர்வகாக அறிவிக்கப்பட உள்ளார்.
இந்நிலையில் கலைஞர் கருணாநிதியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரது மூத்த மகனான அழகிரி, தனது முகநூல் பக்கத்தில் திமுக வின் நிரந்தர தலைவர் கலைஞர் தான் என பதிவிட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments