Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாங்காய் கொட்டை வீசிய தகராறு..! – மாணவர்களிடையே கத்துக்குத்து!

Webdunia
திங்கள், 16 மே 2022 (13:26 IST)
கிருஷ்ணகிரியில் மாங்காய் கொட்டை வீசிய தகராறில் பள்ளி மாணவர்கள் இடையே கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தருமன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பிரவின் குமார். இவர் அப்பகுதியில் உள்ள புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் சஞ்சய் மற்றும் சுனில்குமார் என்ற இருவருக்கும் இடையே சண்டை இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சண்டையில் பிரவின் குமார் மற்ற இருவர் மீது மாங்கொட்டையை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் பிரவின் குமாரை பழிவாங்க எண்ணிய சஞ்சய் மற்றும் சுனில்குமார் பிரவினுக்கு அன்று மாலையே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து அடுத்த நாள் பள்ளிக்கு வந்த பிரவினை அவர்கள் கத்தியால் குத்தியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக பிரவினை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்த ஆசிரியர்கள் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவேரிபட்டிணம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments