Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்கு பயந்தவர்களுக்கு போர் எதற்கு? ரஜினியை கலாய்த்த கஸ்தூரி!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:43 IST)
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என நடிகை கஸ்தூரி டிவிட். 

 
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் தனது உடல் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் எனவே ரசிகர்கள் தன்னை மன்னிக்கும்படி ஏற்று உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். 
 
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 100% நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவரது உடல் நலனை கணக்கில் கொண்டு ரசிகர்கள் தற்போது ஆறுதல் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். 
 
கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம்  பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும். 
 
எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான்.  எப்பவோ  சொல்லியிருந்தால்  ஏராளமானவர்களுக்கு  வலியை  தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை ! என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments