விடிந்தும் விடியாமலும் காசிமேட்டில் செம கூட்டம்: மீனுக்கு பயங்கர கிராக்கி!

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (10:54 IST)
நாளை முழு ஊரடங்கு என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன்வாங்க வியாபாரிகள் திரண்டனர். 
 
கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகள் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுகிழமை பொது முடக்கத்தை முன்னிட்டு சனிக்கிழமையே காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் அதிக அளவில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது.  
 
இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய அனுமதி. அதோடு காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன்வாங்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் நாளை நான்காவது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் இன்றே விடிந்து விடியாமல் காலை 3 மணிக்கே சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வியாபாரிகள் திரண்டனர். அனைவரும் முகக்கசசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளி கடலோடு கரைந்து போனது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments