Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டுக் கொடுத்த கரூர் வட்டாட்சியர்

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (21:07 IST)
கரூரில் அரசு  நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டுக் கொடுத்த கரூர் வட்டாட்சியர் அமுதா உள்ளிட்ட 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான ஆறே முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் பல வருடங்களுக்கு முன்னர் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட இந்த நிலத்திற்காக அந்த நில உரிமையாளர்களுக்கு 5.14 கோடி ரூபாய் அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் வட்டாட்சியர் அமுதா இந்த ஆறே முக்கால் ஏக்கர் நிலத்தை தனியார் ஒருவருக்கு கடந்த இருபது நாட்களுக்கு முன்னதாக பட்டா போட்டு வழங்கியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த புகாரின் பேரில் கடந்த சில தினங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையில் வட்டாட்சியர் அமுதா அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு வழங்கியது ஊர்ஜிதம் ஆகியது இதையடுத்து மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் கரூர் வட்டாட்சியர் அமுதாவை நில அளவையர் சித்ரா, மாவட்ட தலைமை நில அளவையர் சாகுல் ஹமீது ஆகிய 3 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அரசு நிலத்தை வட்டாட்சியர் தனியாருக்கு பட்டா போட்டு அளித்த சம்பவம் அதைத்தொடர்ந்து அந்த வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் அரசு அலுவலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்.. என்ன காரணம்?

சென்னையில் அடுத்தடுத்து 7 இடங்களில் நகை பறிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

7வது நாளாக தொடர்ந்து உயர்ந்தது இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

5 நாட்களில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments