கரூர் வந்தது சிபிஐ விசாரணை குழு.. பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்..!

Mahendran
வெள்ளி, 17 அக்டோபர் 2025 (10:11 IST)
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம் குறித்து விசாரணை செய்ய, சிபிஐ அதிகாரிகள் குழு கரூர் வந்துள்ளது.
 
இந்த சிபிஐ குழுவினர், நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருந்த ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று  அல்லது நாளைய தினம் முழு வீச்சில் விசாரணை தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை தடை செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments