Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் பலி

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (11:51 IST)
கரூர் அருகே மணல் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், சம்பவம் இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை பகுதியை அடுத்த மேலகம்பேஸ்வரம் பகுதியை சார்ந்த சக்தி (35), வெள்ளைச்சாமி (வயது 36) ஆகிய இருவரும் பணி நிமித்தமாக குளித்தலையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 
 
இந்நிலையில் குளித்தலையிலிருந்து மணப்பாறையை நோக்கி மணல் ஏற்றி சென்ற லாரி தேசிய மங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே மோதியது. 
 
இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மணல் லாரிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி, அப்பகுதியில் திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் குளித்தலை டூ மணப்பாறை  நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் குளித்தலை போலீஸார் விரைந்து சமரச பேச்சுவார்த்தையின் கீழ் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
 
இந்த விபத்தில் பலியான இருவரது உடல்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குளித்தலை நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments