Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூரில் சத்துணவு ஊழியர்கள் பேரணி

கரூரில் சத்துணவு ஊழியர்கள் பேரணி
, புதன், 31 ஆகஸ்ட் 2016 (21:14 IST)
கரூரில் சத்துணவு ஊழியர்கள் ஊதியம் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.


 
சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கிட வேண்டும். காலிபணியிடங்களை உடன நிரப்பிட வேண்டும். ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாபெரும் பேரணி போராட்டம் நடைபெற்றது.

பேரணி விளக்க கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.பழனியம்மாள் தலைமைவகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் பேரணியை துவுக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் ஆர்.முருகேசன், மாவட்ட செயலாளர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.மாலதி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணை தலைவர் ஆர்.ரத்தினமாலா, சாலைப்பணியாளர் சங்க மாநில துணைதலைவர் செ.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.

மாவட்ட பொருளாளர் கே.சிவகாமி நன்றி கூறினார். கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் பேரணி துவங்கி பழைய திண்டுக்கல் ரோடு, ஜவகர் பாஜார் வழியாக வந்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் கல்வி உரிமைப் பாதுகாப்பு குழு அமைப்பு