’கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு 15 நாள் காவல்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (17:56 IST)
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட ’கறுப்பர் கூட்டம்’யூடியூப் சேனல் நிர்வாகிகள் செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
’கறுப்பர் கூட்டம்’ சேனலின் செந்தில் வாசன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் என்பதும் சுரேந்திரன் நேற்று புதுவை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ’கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் 
 
’கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுரேந்திரன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நீதிபதிகளின் உத்தரவுப்படி சுரேந்திரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
கந்தசஷ்டிகவசம் அவதூறாக விமர்சனம் செய்து ’கறுப்பர் கூட்டம்’ குழுவினர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என முருக  பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments