Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு இன்று 93வது பிறந்த நாள் : தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (09:02 IST)
இன்று பிறந்த நாள் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு பல்வே தரப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுக தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.


 

 
கருணாநிதி கடந்த 1924ஆம் ஆண்டு ஜூன் மதம் 3ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார். இளம் வயது முதல் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் அவருக்கு 92 வயது முடிந்து இன்று 93 வயது பிறக்கிறது.
 
அவரது பிறந்த நாளையொட்டி திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். கருணாநிதி இன்று காலை 7 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
 
பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்து திமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
 
இன்று மாலை 6 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி உரையாற்றுகிறார்.
 
அவரது பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments