Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எமனையே ஜெயித்து மீண்டு வருவார் கருணாநிதி - வைகோ

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (11:18 IST)
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிதி எமனையே ஜெயித்து மீண்டு வருவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது.
 
ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலை சீரானது என இரவு 11 மணிக்கு காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. 
 
இதற்கிடையே இன்று கருணாநிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
 
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில் விரைவில் கலைஞர் நலம் பெறுவார் என்றும் அவர் நூறாண்டு காலம் வாழ்வார் என்றும் தெரிவித்தார். மேலும் கலைஞர் எமனையே ஜெயித்து மீண்டு வருவார் என தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments