Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா தொடங்கி வைத்த பஸ்கள் டப்பா டான்ஸ் ஆடுகிறது - கருணாநிதி அறிக்கை

Webdunia
சனி, 24 அக்டோபர் 2015 (20:31 IST)
ஜெயலலிதா தொடங்கி வைத்த பஸ்கள் டப்பா டான்ஸ் ஆடுகிறது என்று ஜூனியர் விகட்னில் வெளியான செய்தியை குறிப்பிட்டு கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
 
இது குறித்து கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கேள்வி: தேர்தல் வருகிறது என்றதும், அவசர அவசரமாக முதலமைச்சர் ஜெயலலிதா 100 கோடி ரூபாயில் புதிதாக வாங்கப்பட்ட 422 பேருந்துகளைத் தொடங்கி வைத்ததாகச் செய்தி வந்திருக்கிறதே; அந்தப் பேருந்துகள் எப்படி உள்ளதாம்?
 
பதில்: நான் அந்தப் பேருந்துகளைப் பார்க்கவில்லை. ஆனால் இந்த இதழ் ஜூனியர் விகடன் இதழில் அந்தப் பேருந்துகளைப் பற்றி ஒரு பெட்டிச் செய்தி வந்துள்ளது. அதில், "ஜெயலலிதா தொடங்கி வைத்த பஸ்கள் டப்பா டான்ஸ் ஆடுகிறது. பஸ் கியர் உடைந்தும், ஆங்காங்கே பஸ்கள் பிரேக்டவுனாகியும் காட்சி அளிக்கிறது" என்று எழுதியிருக்கிறார்கள்.
 
புதிய பேருந்துகளே இப்படிப் "புரட்சிகரமாக" ஓடுகின்றனவே! பேருந்துகள் தயாராக இருந்த போதும், முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க தேதி கொடுக்க தாமதமானதால், அந்தப் பேருந்துகள் எல்லாம் வெயிலிலும், மழையிலும் நிறுத்தப்பட்டிருந்தபோது பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
 
அதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் 23-10-2015 தேதிய "இந்து"ஆங்கில நாளிதழில், "SETC runs worn-out buses - Unions" என்ற தலைப்பில் "The new buses, flagged off by the Chief Minister Jayalalithaa recently, have been waiting in depots for over six months" - அதாவது முதலமைச்சர் ஜெயலலிதா கொடி அசைத்து தொடங்கி வைத்த புதிய பேருந்துகள் ஆறு மாதங்களுக்கு மேலாக டெப்போவில் கிடந்தன என்று "இந்து" எழுதியுள்ளது.

என்று அதில் குறிப்பிடுள்ளார்.
 

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments