Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியை வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கிறார் ஸ்டாலின்: அழகிரியை இழுத்து விடும் மதுசூதனன்!

கருணாநிதியை வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கிறார் ஸ்டாலின்: அழகிரியை இழுத்து விடும் மதுசூதனன்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (09:47 IST)
திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கிறார் என அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் கடுமையாக சாடினார்.


 
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் முக்கிய பிரச்சார பொருளாக மாறியிருப்பது ஜெயலலிதாவின் மரணம்.
 
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் ஓபிஎஸ்-ஐ இணைக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ் அணி சார்பாக ஆர்கே நகரில் போட்டியிடும் மதுசூதனன் பேசும் போது ஸ்டாலினின் குற்றச்சாட்டு தேவையில்லாத குற்றச்சாட்டு என்றார்.
 
மேலும் தனக்கு ஒரு சந்தேகம் இருப்பதாக கூறிய மதுசூதனன்,  கருணாநிதியை அறைக்குள் பூட்டிவைத்துவிட்டு ஸ்டாலின் அரசியல் செய்கிறார். இதை நான் சொல்லவில்லை. அவரது சகோதரர் அழகிரிதான் சொல்கிறார். இதற்கு ஸ்டாலின் சொல்லும் பதில் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments