Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? கருக்கா வினோத் வாக்குமூலம்..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (09:33 IST)
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? என போலீஸ் காவலில் கருக்கா வினோத் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சிறையில் இருந்த போது நீட் தற்கொலை தொடர்பான செய்திகளை படித்த போது மன உளைச்சல் ஏற்பட்டது  என்றும், ஆறாம் வகுப்பு படிக்கும் தன் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றும், நீட் தேர்வு இருந்தால் தன் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு வீசினேன் என்றும் கருக்கா வினோத் கூறியுள்ளார்,.
 
மேலும் பிஎப்ஐ அமைப்பினருக்கும், தனக்கும் எந்த தொடர்புமில்லை என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்றும் கருக்கா வினோத் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் சிறையில் இருந்து வெளியே வந்ததற்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை என்றும் கருக்கா வினோத் போலீசில் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments