Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகெங்கையில் மீண்டும் கார்த்திக் சிதம்பரம் போட்டியா? உள்கட்சி மோதலை மீறி வெற்றி கிடைக்குமா?

Siva
செவ்வாய், 19 மார்ச் 2024 (08:47 IST)
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என மொத்தம் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தொகுதிகள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் சிவகங்கை தொகுதியும் இருப்பதால் அந்த தொகுதியில் மீண்டும் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதையும் மீறி கார்த்திக் சிதம்பரம் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி சிவகங்கை தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக திமுக போட்டியிடவில்லை என்ற அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் திமுக நிர்வாகிகள் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட்டால் ஒத்துழைப்பு தருவார்களா என்ற கேள்வியின் தற்போது எழுந்துள்ளது. 
 
உள்கட்சி பிரச்சனை மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவற்றையும் மீறி கார்த்திக் சிதம்பரம் மீண்டும் சிவகங்கையில் போட்டியிட்டு வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments