Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னார் குடி கும்பலிடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள் - கராத்தே ஹுசைனி

Webdunia
புதன், 28 டிசம்பர் 2016 (17:44 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என கராத்தே ஹுசைனி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மறைந்த தமிழக முதல்வர் ஜெ.வின் கடந்த கால ஆட்சியில் தன்னை அதிமுக-வின் அபிமானியாக காட்டிக் கொண்டவர் கராத்தே ஹுசைனி. தனது ரத்தத்தினால் ஜெ.வின் உருவ படம் வரைந்து அவரிடம் கொடுத்தவர். அதேபோல், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா சிறையில் இருந்த போது, தன்னை சிலுவையில் அறைந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. அவரது மரணத்தில் கண்டிப்பாக மர்மம் அடங்கியுள்ளது. அவரை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். இதற்கு பின்னால் சசிகலாவின் கணவர் நடராஜன் இருக்கிறார். எனவே ஜெ.வின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
 
ஜெயலலிதாவை சசிகலவும், அவரது கணவர் நடராஜனும் சேர்ந்து  கொலை செய்யவும், அவரிடமிருந்து தமிழ் நாட்டை அபகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் 40 பக்க கடிதம் ஒன்றை எழுதி அவரிடம் கொடுத்தேன். அது போலீசாரிடம் கொடுக்கப்பட்டு, நடராஜன் 2 வாரங்கள் சிறையில் வைக்கப்பட்டார். ஆனால் அதன்பின் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. 
 
இரண்டு முறை ஓ.பி.எஸ் மீது நம்பிக்கை வைத்து அவரை முதல் அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. எனவே அவர், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார் குடி கும்பலிடம் ஆட்சியை கொடுத்து விடக்கூடாது” என அவர் வேண்டுகோள் விடுத்தார். இவரின் பேட்டி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments