Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜா திட்டியதால் சூடுபிடித்த வியாபாரம்! – நன்றி சொன்ன காரப்பன்!

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (18:35 IST)
காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் குறித்து எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் போட்டதால் கடை வியாபாரம் அமோகமாக நடைபெற தொடங்கியுள்ளதாக அந்த உரிமையாளரே கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் அருகே உள்ள சிறுமுகையில் துணிக்கடை வைத்திருப்பவர் காரப்பன். சமீபத்தில் திராவிட கழக கூட்டம் ஒன்றில் பேசிய காரப்பன் இந்து கடவுள்கள் குறித்து கீழ்தரமாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கங்கள் சிலவும் போராட்டம் நடத்தின. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இந்து உணர்வாளர்கள் யாரும் காரப்பன் கடையில் துணிகள் வாங்க கூடாது. இதுப்போன்ற இந்து கடவுள்களை விமர்சிக்கும் அனைத்து கடைகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எச்.ராஜா ட்விட்டரில் வெளியிட்ட இந்த பதிவு பலரால் ஷேர் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இதுவரை பெயர் தெரியாமல் இருந்த காரப்பன் சில்க்ஸ் பலருக்கு தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதைம் தொடர்ந்து மேலும் பலர் காரப்பன் சில்க்ஸுக்கு ஆதரவாக ட்விட்டரில் ஹேஷ்டேகுகளையும் பதிவிட்டிருக்கின்றனர். இதனால் உள்ளூர் மட்டுமல்லாது பக்கத்து ஊர்க்காரர்களும் பலர் காரப்பன் சில்க்ஸ் வந்து ஜவுளி வாங்கி செல்கின்றனராம்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த காரப்பன் ’எச்.ராஜா தன்னை விமர்சித்து ட்வீட் போட்ட பிறகு வியாபாரம் அதிகரித்துள்ளதாகவும், இதற்காக அவருக்கு நன்றிகள் சொல்லிக்கொள்வதாகவும்’ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய கோயம்புத்தூர் பக்க பாஜகவினர் ‘தீபாவளிக்கு வரும் கூட்டம்தான் வழக்கமாக வந்துள்ளதாகவும், காரப்பன் விளம்பரத்திற்காக எச்.ராஜாவை நக்கல் செய்கிறார்’ என்றும் கருத்து கூறியிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments