பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழாவில் கனிமொழி எம்பி.. தனிப்பட்ட பாசமா?

Siva
புதன், 28 பிப்ரவரி 2024 (07:29 IST)
பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழாவில் கனிமொழி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் நிலையில் நேற்று பல்லடம் என்ற இடத்தில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார் என்பதும் அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதையும் பார்த்தோம்.

அதன் பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்த நிலையில் இன்று அவர் தூத்துக்குடியில் நடைபெற இருக்கும் அரசு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த அரசு விழாவில் பிரதமர் மோடி ,ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும்  அமைச்சர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி எம்பி கனிமொழி இந்த விழாவில் கலந்து கொள்ளும் நபர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தாலும் கனிமொழி மீது அவர் தனிப்பட்ட பாசம் வைத்துள்ளதாகவும் அவர் மீது எப்போதும் அவர் மரியாதை வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த வகையில் தான் தூத்துக்குடி அரசு விழாவில் பங்கேற்க கனிமொழிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என்பதும் அவரும் இன்று நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments