Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா??” கனிமொழி கேள்வி

Arun Prasath
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (11:43 IST)
தெலுங்கானா பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி “என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரை போலீஸார் இன்று காலை சுட்டுக்கொன்றுள்ளது.

அதாவது 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்த முயன்றபோது தப்பி ஓட முயன்றதாகவும், ஆதலால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றதை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திமுக எம்.பி.கனிமொழி, “4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில் நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது” என கூறியுள்ளார். மேலும், அதே வேளையில் என்கவுண்ட்டர்தான் இதற்கு தீர்வா எனவும் கேள்வி எழுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments