Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமனம்..!!

Senthil Velan
திங்கள், 10 ஜூன் 2024 (22:20 IST)
திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் கைப்பற்றியது. புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியை காங்கிரஸ் கட்சி வென்றது. நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 8 ஆம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 
 
இந்நிலையில்  மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து திமுகவின்  நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
மேலும், மக்களவைக் குழுத் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பியும், மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களைவை கொறடாவாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், திமுக மாநிலங்களவைக்குழுத் தலைவராக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.யும், மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம்,எம்.பி.யும், மாநிலங்களவை கொறடாவாக  திமுக தலைமைக் சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ: மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு..! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் நியமிக்கப்படுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments