Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழை பெண்களுக்கு கல்வி கொடுத்த கலெக்டர் கஜலட்சுமி

ஏழை பெண்களுக்கு கல்வி கொடுத்த கலெக்டர் கஜலட்சுமி

கே.என்.வடிவேல்
திங்கள், 13 ஜூன் 2016 (06:11 IST)
சுனாமியால் செயல் இழந்து போன மீனவரின் இரு மகள்களின் கல்விச் செலவை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி ஏற்றுக் கொண்டார்.
 

 
தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டக் கடலோரப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
 
இதில், கானத்து ரெட்டிகுப்பத்தில் சுனாமியால் புதைந்த மீனவர் சண்முகவேலை மீட்பு குழுவினர் உயிரோடு மீட்டனர். ஆனால், அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்தது.
 
இதனால், அவருக்கு ரூ. 25,000 மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதன்படி செய்யவில்லை. இதனால், அவரால் தனது குழந்தைகளை படிக்கவைக்க கூட முடியவில்லை. அந்த அளவு வறுமை வாட்டியது.
 
இந்த தகவல் அறிந்த காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி, மீனவர் சண்முகவேலுவின் இரண்டாவது மகள் மஞ்சுளா பட்டப்படிப்பு மற்றும் மூன்றாவது மகள் யுவஸ்ரீயின் கல்விச் செலவு ரூ.55 ஆயிரத்தை தனது சொந்தப் பணத்தில் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
 
மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கால்கடுக்க நின்று மனு கொடுத்தால் கூட, அதை வாங்கி படித்து பார்க்க மறுக்கும் கலெக்டர்கள் மத்தியில், ஏழைகளின் அழுகுரலுக்கு செவிசாய்த்து கருணையை வாரிவழங்கிய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி-க்கு ஒரு ராயல் சல்யூட். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments