கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (06:43 IST)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று பகலில் ஒரு சில மணி நேரங்களும் இரவு முழுவதும் விடாமலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளனர்
 
இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வடபழனி, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது
 
சென்னை மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் 
 
இதேபோல் சென்னை உள்பட மற்ற பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments