ராகுல்காந்தியோடு கை கோர்க்கும் கமல்ஹாசன்!? – டெல்லியில் சந்திப்பு!

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (16:14 IST)
இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல்காந்தி நடத்தி வரும் நிலையில் கமல்ஹாசனும் இந்த யாத்திரையில் பங்கேற்க உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாக்குமரியில் தனது யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் என பல மாநிலங்களை தாண்டி பயணித்து வருகிறார்.

தற்போது 100வது நாளை எட்டியுள்ள இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது. ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் இணைய உள்ளார். இந்த பாத யாத்திரை வரும் 24ம் தேதியன்று டெல்லிக்கு வர உள்ளது. அப்போது டெல்லியில் ராகுலோடு கை கோர்த்து கமல்ஹாசனும் பாத யாத்திரை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments