பேரிடர் உதவிக்கு இறங்கிய மக்கள் நீதி மய்ய படை! – கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (12:07 IST)
தமிழகத்தில் இன்று மதியம் நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பேரிடர் உதவி பணிகளுக்காக மக்கள் நீதி மய்யத்தினர் தயாராக உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. தற்போது தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் போது அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் புயலால் ஏற்படும் சேதங்களை சரி செய்யவும், மக்களுக்கு உதவவும் மீட்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் தயாராக உள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்ய கட்சி தொண்டர்கள் பலர் மீட்பு பணிகளில் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர் “உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை ரத்தத்தில் உண்டே உதவுமனம் - எத்தனையோ பத்தாண்டு காலமாய் நற்பணிகள் செய்துவரும் வித்தன்றோ எந்தன் படை! பேரிடர் உதவிப் பணியில் இறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யப் படையணிக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments