Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு இப்படியா விருது தருவது? – கமல்ஹாசன் அறிக்கை!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (12:12 IST)
தமிழக அரசு சார்பில் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்களை போற்றும் வகையில் விருதுகள், பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை பெற அரசு குறிப்பிடும் நேரத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன் “எந்த கலைஞனும், எழுத்தாளரும் தானாக சென்று தனக்கு விருது வேண்டுமென்று கேட்டு பெற்றால் அது விருது கிடையாது பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியான ஒரு விருதை எந்த கலைஞனும் விரும்புவதில்லை. எனவே ஒவ்வொரு துறைக்கும் அத்துறை சார்ந்த நிபுனர்கள் குழுவை அமைத்து அவர்கள் மூலமாக சிறந்த எழுத்தாளர், கலைஞர்களை கண்டறித்து விருது வழங்க வேண்டும். அதுவும் அந்த கலைஞனை அந்தந்த பகுதி மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த பகுதிகளிலேயே விழா நடத்தி விருதை வழங்கவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments