Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் இருப்பவை தவளைகள் - கமல்ஹாசன் அதிரடி

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (11:42 IST)
தற்போதை அரசியல்வாதிகள் அனைவரும் பழைய கிணற்று தவளைகள் என மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 
பாடலாசிரியர் சினேகன் மக்கள் நீதி மய்யத்திற்காக ‘இது நம்மவர் படை’ என்கிற பெயரில் பாடல் தொகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். 6 பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பை சென்னையில் நேற்று கமல்ஹாசன் வெளியிட்டார்.
 
அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன் “நம்மவர் என்பது உங்களையும், என்னையும் சேர்த்தே குறிக்கும். பேனர்கள் மூலம் நம்மை மக்களுக்கு தெரியக்கூடாது. எங்களின் செயல்பாடுகள் மூலமாகவே மக்களுக்கு அது தெரியவேண்டும்.
 
மக்கள் மகாத்மாக்களை நாடாளுமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த பழைய கிணற்றில் தவளைகள்தான் இருக்கிறது. உங்கள் தெருக்களில் உங்களை சுற்றித் தேடுங்கள். மகாத்மா கிடைப்பார். அவர்கள்தன் மக்கள் நீதி மய்யம். நாங்கள் தொண்டர்களை உருவாக்க விரும்பவில்லை. தலைவர்களை உருவாக்கவே ஆசைப்படுகிறோம்.
 
தமிழகத்தின் மீது ஏற்பட்டுள்ள கறை அரை நூற்றாண்டு காலமாக உண்டாக்கப்பட்ட கறை. அதை துடைத்தெறியவே மக்கள் நீதி மய்யம் இருக்கிறது” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments