Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் மக்களாட்சியை தருகிறேன் - ரஜினிக்கு செக் வைத்த கமல்ஹாசன்

நான் மக்களாட்சியை தருகிறேன் - ரஜினிக்கு செக் வைத்த கமல்ஹாசன்
Webdunia
புதன், 7 மார்ச் 2018 (13:40 IST)
தமிழகத்தில் மக்களாட்சியை தான் கொண்டு வரப்போவதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துவிட்ட நிலையில், ரசிகர்கள் சந்திப்பு, மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமிப்பது என வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
 
அந்நிலையில்தான், சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை சமீபத்தில் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது, பேசிய ரஜினிகாந்த் “எல்லோராலும் எம்.ஜி.ஆர் ஆகி விட முடியாது. என்னாலும் முடியாது. ஆனால், அவரின் ஆட்சியை என்னால் கொண்டு வர முடியும்” என அவர் பேசினார்.
 
இந்நிலையில், இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “நான் மக்களாட்சியை தருகிறேன்” என பதிலளித்துள்ளார்.
 
எம்.ஜி.ஆர் ஆட்சி என ரஜினி கூறியுள்ள நிலையில், மக்களாட்சியை தருகிறேன் என கமல்ஹாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments