Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 7ம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை - ரசிகர்களை ஏமாற்றிய கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (16:21 IST)
தனது பிறந்த நாளன்று அரசியல் கட்சி தொடர்பாக எந்த அறிவிப்பையும் அறிவிக்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக அரசுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், டெங்கு போன்ற மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் பற்றியும் அவர் பேசிவருகிறார். விரைவில் தான் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக கமல்ஹாசன் வெளிப்படையாக பேட்டியளித்தார்.
 
அதோடு, சில நாட்களுக்கு முன்பு தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில் அவரது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி  முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என நிர்வாகிகள் கூறியிருந்தனர். எனவே,  அன்று அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றியே அறிவிப்பார் என அவரது ரசிகர்களும், நற்பணி மன்ற இயக்கத்தினரும் எதிர்பார்த்திருந்தனர்.
 
அநிலையில், தனது ஆதரவாளர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு மொபைல் ஆப்-பை மட்டுமே அவர் நவம்பர் 7ம் தேதி வெளியிட இருக்கிறார் எனவும், அதற்கான ஏற்பாடுகள்தான் தீவிரமாக நடைபெற்று வருகிறது என இன்று காலை ஒரு செய்தி வெளியானது. 
 
இந்நிலையில் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7  இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம். பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கும், நற்பணி மன்ற இயக்கத்தினருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. இனியும் தாமதம் கூடாது: அன்புமணி

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

டிகிரி போதும்.. 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள்! - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments