Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ஆன்மீக அரசியலை மக்கள் நீதி மய்யம் ஏற்று கொள்ளும்: மநீம பொதுச்செயலாளர்

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (13:46 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. இதையே தான் அவர் அரசியலுக்கு வருவதாக கூறிய 2017 டிசம்பர் 31ஆம் தேதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினி, கமல் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இது குறித்து ரஜினி கமல் கூட ஆலோசனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளருமான சி.கே.குமாரவேலு என்பவர் ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்தித்தால் கமலஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் ஆன்மிக அரசியலை மக்கள் நீதி மய்யம் ஏற்றுக்கொள்ளும் என்றும் ஆனால் அதே நேரத்தில் மத அரசியலை ஏற்றுக் கொள்ளாது என்றும் ரஜினியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யட்தின் 2ஆம் கட்டத் தலைவர்களின் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்
 
ரஜினியும் கமலும் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி கூட இன்னும் முழுமை பெறாத நிலையில் அரசியலில் இந்த இரு துருவங்கள் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments