Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வரை பாராட்டுகிறேன்: கமல்ஹாசன் டுவிட்

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (11:31 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்து டுவிட்டுகளை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டுகளில் அவர் கூறியிருப்பதாவது:
 
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனுகொடுத்தோம். 
 
12 ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமியற்றப்பட்டு இன்னமும் செயல்பாட்டுக்கு வராத இந்த அமைப்புகளை உடனே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் மனு கொடுத்தார்கள்.
 
சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,காவல்துறை,வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகமுதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழகமுதல்வரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்
 
அதேசமயம், இந்த நடைமுறையை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments