Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்து இதுதான்: கமல்ஹாசன்

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (18:01 IST)
திரையுலகில் இருந்து முதல்வர் கனவுடன் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று நடைபெற்ற கல்லூரி மாணவர்களிடையான உரையாடலில் தான் முதல்வரானதும் போடும் முதல் கையெழுத்து குறித்து குறிப்பிட்டுள்ளார்.

பொன்னேரி அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று மாணவர்களிடையே உரையாடிய கமல், மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், 'நீங்கள் முதல்வரானது போடும் முதல் கையெழுத்து எது? என்று கேட்டபோது, 'லோக் ஆயுக்தா' என்று பதிலளித்தார். இதே வாக்குறுதியை கடந்த சில வருடங்களுக்கு முன் பாமகவின் அன்புமணி அளித்திருந்தார் என்பதும் ஆனால் அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோக் ஆயுக்தா என்பது ஊழலுக்கு எதிராக விசாரணை செய்யும் ஒரு மாநில நீதியமைப்பாகும். இந்த அமைப்புக்கு ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே சம்மன் அனுப்பி விசாரிக்கும் அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுக அரசுகள் லோக் ஆயுக்தாவை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அமெரிக்க சுகாதார மைய இயக்குனர் ஆகிறார் இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கலா?

சென்னை அருகே 'ஃபெங்கல்' புயல் கரையை கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு

மாணவரின் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்: மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments