Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலை விட்டு இறங்க மறுத்த குழந்தை – அரசியல் கூட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (08:27 IST)
நடிகர் கமல்ஹாசன் எதிர்பாராத திருப்பமாக திடீரென அரசியலில் இறங்கி தனது கட்சியையும் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார்.

நடிகர் கமல் ஆளும்கட்சியுடனான  தனது அரசியல் மோதல்களை அடுத்து தான் அரசியலில் இறங்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். அறிவித்தது போலவே இந்தாண்டு பிப்ரவரி மாதம் தனது கட்சியை ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் அறிவித்தார். அவரது கட்சியின் பெயராக மக்கள் நீதி மய்யம் என சூட்டப்பட்டுள்ளது. தங்கள் கட்சி இடதுசாரி கட்சியும் வலது சாரியும் கட்சியும் மய்யமான கட்சி என அறிவித்து கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

வரும் இடைத்தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசன் செல்லும் இடங்களில் அவருக்கு மக்களிடம் இருந்து ஆரவாரமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதுபோல சமீபத்தில்  மக்களை சந்தித்த கமல் மக்களிடையே பேசிக்கொண்டிருந்த போது கமலின் தொண்டர் ஒருவர் கமலிடம் கொடுத்து ஆசி வழங்கக் கூறினார். குழந்தையை வாங்கிக் கொஞ்சிய கமல் சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தையை பெற்றோரிடம் கொடுக்க முயன்ற போது குழந்தை கமலை விட்டு இறங்க மறுத்தது. கமல் மீண்டும் சிறிது நேரம் கழித்து கொடுக்க முயன்ற போதும் குழந்தை அவரை விட்டு செல்ல மறுத்தது. இதனை கூட்டத்தினர் ஆரவாரமாக குரலெழுப்பி மகிழ்ந்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments