கலாம் படித்த பள்ளியை வெளியே நின்று பார்வையிட்ட கமல்ஹாசன்

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (09:30 IST)
அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல அனுமதி இல்லை என மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்த நிலையில், நடிகர் கமல், அப்துல்கலாம் படித்த பள்ளியை வெளியில் இருந்து பார்வையிட்டார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அப்துல்கலாம் வீட்டிலிருந்து துவங்கினார். அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற கமல்ஹாசனை அப்துல்கலாமின் பேரன் சலீம் வரவேற்றார். மேலும் அப்துல்கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து ஆசி பெற்றார். அப்துல்கலாம் பெற்ற பரிசுகள் கோப்பைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். 
 
இன்று காலை 8.15 மணிக்கு இராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நினைத்த கமலுக்கு அனுமதி இல்லை என மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்தது. ஆதலால் அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து பார்வையிட்டு சென்றார் கமல்ஹாசன். அரசியல் நோக்கம் இருப்பதால் கமல் பள்ளிக்குள் செல்ல தடை விதித்ததாக மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments