Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரம் கழித்து ரஜினிக்கு வாழ்த்து கூறிய கமல்!

Webdunia
ஞாயிறு, 3 நவம்பர் 2019 (22:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று மத்திய அரசு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி’ என்கிற சிறப்பு விருதை அறிவித்தது. இந்த விருது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட உள்ளது. இதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார்.
 
இந்த நிலையில் ரஜினிக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி’  விருது அறிவிக்கப்பட்டவுடன் இந்திய திரையுலகமே அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. குறிப்பாக தமிழ் திரையுலகில் ரஜினிக்கு வாழ்த்து சொல்லாதவர்களே இல்லை எனலாம். தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும், விருது அறிவித்த மத்திய அரசுக்கும் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தனித்தனியாக நன்றி கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்ட ஒருநாள் கழித்து இன்று மாலை அவருடைய நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. என்னதான் 40 ஆண்டுகால நண்பர் என்றாலும் இன்றும் ரஜினியும் கமலும் தொழில்முறை போட்டியாளர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினிக்கு முதல் நபராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்றே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments