Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் சொன்ன ஒருவார்த்தை… வலுக்கும் திமுகவினரின் கண்டனம்

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:31 IST)
கமல் சமீபத்தில் பேசிய ஒரு கூட்டத்தில் சக்கர நாற்காலி காலம் வரை எல்லாம் உங்களுக்கு தொல்லைக் கொடுக்க மாட்டேன் எனக் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறார். திமுக மற்றும் அதிமுகவோடு கூட்டணி இல்லை என உறுதியாகக் கூறிவிட்ட நிலையில் வேறு எந்தவொரு கட்சியோடும் கூட்டணி அமைக்கவில்லை. இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் ‘நான் ஆக்டிவ்வாக இருக்கும் வரைதான் அரசியலில் இருப்பேன். சக்கர நாற்காலி காலம் வரை எல்லாம் இருந்துகொண்டு உங்களுக்கு தொல்லைக் கொடுக்க மாட்டேன்’ எனக் கூறினார். சக்கர நாற்காலி என்று சொன்னது தங்கள் தலைவர் கலைஞரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக திமுகவினர் இப்போது கமல்ஹாசனுக்கு எதிராகக் கண்டனங்களை எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments