பாஜகவில் அண்ணாமலை யாரையும் வளரவிடமாட்டார்: கல்யாண் ராமன் குற்றச்சாட்டு!

Mahendran
வெள்ளி, 7 ஜூன் 2024 (20:33 IST)
நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவால் ஒரு இடத்தில் வெற்றி பெற முடியாத நிலையில் அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 
 
ஏற்கனவே நாங்கள் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்தோம், அதை அண்ணாமலை கேட்கவில்லை என தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது பாஜக நிர்வாகி கல்யாணராமன், அண்ணாமலை யாரையும் பாஜகவில் வளர விட மாட்டார் என குற்றம் காட்டியுள்ளார் 
 
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க உயிரை கொடுத்து பணி செய்த பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச் ராஜா, சிபி ராதா கிருஷ்ணன், எல் கணேசன் போன்ற தலைவர்களை அண்ணாமலையின் ஆட்கள் சமூக வலைதளங்களில் இழிவு படுத்துகின்றனர் என்று கல்யாண்ராமன் குற்றம் சாட்டியுள்ளார் 
 
அண்ணாமலையை புகழ்வதும் மற்ற தலைவர்களை இகழ்வதும் மட்டுமே அவருடைய வார் ரூம் வேலையாக இருந்தது என்றும் தன்னைத் தவிர யாரையும் கட்சியில் வளர விடாமல் செய்வதே அண்ணாமலையின் நோக்கமாக இருந்தது என்றும் கல்யாணராமன் குற்றம் சாட்டியுள்ளார் 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments