பொன்முடி மகனுக்கு சீட் இல்லையா? விசிகவுக்கு போகிறது கள்ளக்குறிச்சி தொகுதி..!

Siva
வியாழன், 7 மார்ச் 2024 (12:54 IST)
கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடி மகன் கவுதம சிகாமணி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது

அந்த வகையில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க திமுக முன் வந்திருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இந்த தொகுதியில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தொகுதியை விசிகவுக்கு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments