Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை; முதலமைச்சருக்கு மாணவர்கள் கடிதம்!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (09:24 IST)
சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட தேசிய மகளிர் ஆணைய குழு பாலியல் துன்புறுத்தல் எதுவும் நடைபெறவில்லை என அறிக்கை அளித்தது. இதற்கு மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கல்லூரி வளாகத்திலேயே அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏப்ரல் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆனாலும் மாணவிகள் போராட்டத்தை கைவிடாமல் நள்ளிரவு 2 மணி வரை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் தற்போது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் உட்பட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு மாணவ, மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓசூரில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா..! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!

கருணாநிதி நினைவு நாணயத்தில் ₹.. தூக்கி எறிந்துவிடுமா திமுக? அன்புமணி கேள்வி..!

பட்ஜெட் தாக்கலின்போது அமளி: அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

அடுத்த கட்டுரையில்