Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரைப்பட நடிகர் 'காதல்' தண்டபாணி காலமானார்

திரைப்பட நடிகர் 'காதல்' தண்டபாணி காலமானார்
, ஞாயிறு, 20 ஜூலை 2014 (11:55 IST)
‘காதல்‘ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தண்டபாணி மாரடைப்பால் காலமானார்.

தண்டபாணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலன் இன்றி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 61.

‘காதல்‘ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தண்டபாணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார்.

தமிழில் ‘காதல்‘, ‘சண்டைக்கோழி‘, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘, ‘உனக்கும் எனக்கும்‘ உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil