Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (09:06 IST)
பொங்கல் திருநாளின் கடைசி நிகழ்வாக நாளை காணும் பொங்கல் கொண்டாட இருப்பதை அடுத்து சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
 * உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகும்போது, வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை - முத்துசாமி பாயினட் - வாலாஜா பாயின்ட் - அண்ணாசாலை பெரியார் சிலை - அண்ணாசிலை - வெல்லிங்டன் பாயின்ட் - ஸ்பென்சர் சந்திப்பு - பட்டுளாஸ் சாலை - மணி கூண்டு - GRH பாயின்ட் வழியாக டாகடர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம். 
 
 * அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில், திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம். 
 
* மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையிலிருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வாகனங்கள் செல்ல தடை செய்தும் பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டுள்ளது
 
* பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments