Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீன் 11-ஆம் தேதி தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தல்: ராஜேஷ் லக்கானி தகவல்

Webdunia
வியாழன், 19 மே 2016 (08:26 IST)
தமிழகத்தில் தற்போது தேர்தல் ஜொரம், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஜூன் 11-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.


 
 
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினர்களான நவநீத கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரவிபெர்ணாட்டு, திமுக உறுப்பினர்களான, கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் நாச்சியப்பன் என ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் ஜூன் 29-இல் முடிவடைகிறது.
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேவைப்பட்டால் மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று அன்றைய தினமே வாக்கு எண்ணும் பணியும் நடைபெறும் என தெரிவித்தார்.
 
மே 24 முதல் 31 வரை மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், மனு மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் எனவும், மனுக்களை திரும்ப பெறும் கடைசி தேதி ஜூன் 3-ஆம் தேதி எனவும் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments