Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலி ரொம்ப ஃபீல் பண்ணினா.. - சகோதரர் உருக்கம்

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (17:57 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜூலி, தன்னுடைய வீடியோக்களை பார்த்து மிகவும் மனம் வருத்தப்பட்டதாக அவரின் சகோதரர் ஜோஷ்வா கூறியுள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றவர் ஜூலி. ஆனால், அவரது நடவடிக்கைகள் அனைத்தும் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல.. அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கும் பிடிக்காமல் போனது. சமூகவலைத்தளங்களில் அவருக்கு எதிராகவே மீம்ஸ்கள் மற்றும் கருத்துகள் உலா வந்தது. 
 
அந்நிலையில், சமீபத்தில் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜூலி. அதன் பின் அவர் நடிகர் பரணியை சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக சில புகைப்படங்களும், வீடியோவும் வெளியானது. மேலும், மக்களிடையே அவர் மீது அதிருப்தி இருப்பதால் முகத்தை காட்ட முடியாமல் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் ஜூலியின் தற்போதைய மனநிலை பற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த அவரின் சகோதரர் ஜோஷ்வா “ ஜூலி வீட்டிற்கு வந்தவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதையும் ஹாட் ஸ்டாரில் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். அம்மா, அப்பா இரண்டு பேருக்கும் ஜூலியின் மீது கோபம் இருந்தது. நான் அவர்களை சமாதானப்படுத்தினேன். இரண்டு மாதம் ஓய்வு எடுத்துவிட்டு அவரின் வேலையை அவர் தொடர்வார். ஆனால், சினிமாவில் நடிக்க மாட்டாள். அதை அப்பா, அம்மா ஏற்க மாட்டார்கள்” என அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments